முஹ்யிதீன் யாசின் மரியாதையுடன் பதவி விலக வேண்டும் – காலிக் மெஹ்தாப் கோரிக்கை

top-news

கோலாலம்பூர், பிப். 9-

பெரிகாத்தான் நேஷனல் (PN) மற்றும் பெர்சாத்து கட்சியை எதிர்காலத்துக்கு வழிநடத்துவதற்கு தான் ஸ்ரீ முஹ்யிதீன் யாசின் தற்போது பொருத்தமானவர் அல்ல எனக் கூறி, அவர் மரியாதையுடன் பதவி விலக வேண்டும் என்று பெர்சாத்து கெப்பாலா பாதாஸ் பிரிவு தலைவர் காலிக் மெஹ்தாப் முகமது இஷாக் வலியுறுத்தியுள்ளார்.

கட்சிக்குள் நீடித்து வரும் குழப்பம் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், வரவிருக்கும் 16வது பொதுத் தேர்தல் (PRU16) முன்னேற்பாடுகளில் முஹ்யிதீன் நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவராகச் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது என அவர் தெரிவித்தார்.

கட்சியின் ஒற்றுமையை பலப்படுத்தவும், மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் புதிய தலைமையிடம் அவசியம் என காலிக் கூறினார். தற்போதைய சூழலில், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் PN கூட்டணியின் அரசியல் நிலைப்பாடும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, பொறுப்புணர்வுடன் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் கூறினார். நாட்டின் எதிர்கால அரசியல் போட்டியில் வலுவான அணியாக உருவாக, PN ஒருங்கிணைந்த, தெளிவான, நிலையான தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *