Tengku Zafrul இனி அமைச்சர் இல்லை! அன்வாரின் உதவியாளராகத் தொடர்வார்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 28,

செனட்டரும் முதலீடு வர்த்தகத் தொழில்துறை அமைச்சருமான Datuk Seri Tengku Zafrul Tengku Abdul Aziz எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதியுடன் அமைச்சராக இருக்கமாட்டார் என அமைச்சரும் அரசாங்கத் தொடர்பாளருமான Datuk Fahmi Fadzil தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் Tengku Zafrul இறுதியாகப் பங்கேற்றதாகவும் இதனை அடுத்து நடைபெறவிருக்கும் அமைச்சரவையில் Tengku Zafrul பங்கேற்கமாட்டார் என்றாலும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான மடானி அரசில் அவர் முக்கிய பொறுப்புகளை வகிப்பார் என Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.

ஆனால் என்ன மாதிரியான பதவி அது என்பது குறித்து விரைவில் பிரதமர் அன்வார் அறிவிப்பார் என Datuk Fahmi Fadzil தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து அதிகப்படியான முதலீடுகளைப் பெற Tengku Zafrul முக்கிய பங்களிப்பை வழங்கியிருப்பதாகவும் மேலும் நிதித் துறைகளிலும் முதலீடு நிர்வாகத்திலும் ஆளுமை கொண்ட Tengku Zafrul போன்றவர்களின் பங்களிப்பு மடானி அரசுக்குத் தேவை என்றும் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். செனட்டரும் முதலீடு வர்த்தகத் தொழில்துறை அமைச்சருமான Datuk Seri Tengku Zafrul Tengku Abdul Aziz-இன் செனட்டர் பதவி டிசம்பர் 2 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் அவருக்கு அன்வாருடன் நெருக்கமாக இருக்கும் சிறப்புப் பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

mlhjqoww

தமிழ் மலர் | Tengku Zafrul இனி அமைச்சர் இல்லை! அன்வாரின் உதவியாளராகத் தொடர்வார்! [url=http://www.g8843h40n6d835gxk6uz3560qbx2xxgbs.org/]umlhjqoww[/url] <a href="http://www.g8843h40n6d835gxk6uz3560qbx2xxgbs.org/">amlhjqoww</a> mlhjqoww http://www.g8843h40n6d835gxk6uz3560qbx2xxgbs.org/