செவிலியர்களின் சேவை அளவிட முடியாதது: பிரதமர் பாராட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 12-

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் செவிலியர்களுக்குப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். செவிலியர் தொழில் என்பது மிக உயர்ந்த தியாகம், மனவலிமை மற்றும் அன்பான சேவையை கோரும் புனிதமான பணியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெளியிட்ட பேஸ்புக் பதிவில், “நாம் பிறக்கும் தருணத்திலிருந்தே முதலில் நம்மை கவனித்து பாதுகாப்பவர்கள் செவிலியர்கள்தான். தாய் பிரசவ வேதனையில் இருக்கும் நேரத்திலும் அவர்கள் அருகில் இருப்பார்கள். நமது முதல் அழுகையைக் கேட்பார்கள். நோய்வாய்ப்பட்ட நேரங்களில் நம்மை பராமரிப்பார்கள். வாழ்க்கையின் இறுதி தருணம் வரை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்வார்கள்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் செவிலியர்களின் அன்பான பராமரிப்பை அனுபவித்திருப்போம் என்றும் அவர் கூறினார்.

“வலி தாங்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் அளிப்பதும், பயந்து அழும் குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதும், அவசரநிலைகளில் குடும்பத்தினருக்கு தைரியம் அளிப்பதும் செவிலியர்கள்தான்,” என்றும் அன்வர் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *