ஆற்றில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஆக. 6-


 மலாக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் அருகே ஆற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்பட்டு மாயமான 70 வயதுடைய முதியவர், தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மற்றும் மலேசிய அரச போலீஸ் (PDRM) இணைந்து மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையின்போது, இன்று காலை சுமார் 11.45 மணியளவில் அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து அதிக தூரமில்லாத பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி, துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் II முகமது ஹபிட்சதுல்லா ரஷிட் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.

ஆரம்ப தகவலின்படி, அந்த முதியவர் இன்று அதிகாலை சுமார் 5.45 மணியளவில் ஆற்றில் தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. இதையடுத்து உடனடியாக தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *