தைப்பூசத்திற்கு 24 மணிநேர இலவச ரயில் சேவை!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 20,

மலேசிய இந்துக்களின் பெருவிழாவான தைப்பூசத்திற்கு இலவச ரயில் சேவையை வழங்குவதுடன் 3 நாள்களுக்கு 24 மணிநேரமும் ரயில் சேவை இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke இன்று தெரிவித்தார். ஜனவரி 30, ஜனவரி 31, பிப்ரவரி 1 என தொடர்ச்சியாக 3 நாள்களுக்கு 24 மணிநேரமும் KTMB ரயில் சேவை இயங்கும் என Anthony Loke தெரிவித்தார். இது தைப்பூசம், ஆகையால் மக்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயணப்படுவார்கள் என கடந்த ஆண்டு போக்குவரத்து அமைச்சு நினைத்தது. ஆனால் தொடர்ச்சியாக 3 நாள்களுக்குப் பொதுப்போக்குவரத்து அவசியம் என்பதை அரசு உணர்ந்திருப்பதாக Anthony Loke தெரிவித்தார். 

குறிப்பாக ஜனவரி 31 நள்ளிரவு 12 மணிமுதல் பிப்ரவரி 1 இரவு 11.59 வரையில் KTMB ரயில் சேவையைப் பக்தர்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் எந்தவொரு கட்டணமும் கோரப்படாது என்றும் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார். இந்த திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சு செயல்படுத்த சுமார் 1 மில்லியன் நிதியை அரசு ஒதுக்கியிருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார். இவ்வாண்டு தைப்பூசத்திற்காக ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு ரயில் சேவையில் இருக்கும் என்றும் இது சுமார் 2.5 மில்லியன் மக்களின் சேவைக்கானது என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார். 

பத்துமலை தொடங்கி Taman Wahyu, Kampung Batu, Batu Kentonmen, Sentul, Putra, Bank Negara, Kuala Lumpur, KL Sentral, Bandar Tasik Selatan, Kajang, Nilai, Seremban, Senawang, Sungai Gadut, Rembau, Tampin/Pulau Sebang, Petaling, Kampung Dato Harun, Seri Setia, Subang, Batu Tiga, Shah Alam, Padang Jawa, Bukit Badak, கிள்ளான் வரையிலும் இந்த சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என Anthony Loke தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *