“ஜார்ஜ்குட்டியை குடும்பமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி” - மோகன்லால்
- Surendran Sumdraraj
- 22 May, 2026
கொச்சி, மே 22-
‘திரிஷ்யம் 3’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகர் Mohanlal ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Jeethu Joseph இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம்’ திரைப்படத் தொடர், இந்திய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான த்ரில்லர் படங்களாகக் கருதப்படுகிறது. ஜார்ஜ்குட்டி என்ற சாதாரண குடும்பத் தந்தையின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் மோகன்லால் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஜார்ஜ்குட்டியையும் அவரது குடும்பத்தையும் உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. இந்த திரைப்படம் அன்பு, ஆர்வம் மற்றும் நன்றியுணர்வுடன் உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரசிகர்கள் திரையரங்குகளில் அளித்து வரும் ஆதரவும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினைகளும் தன்னை நெகிழ்ச்சியடைய செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



