பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

top-news
FREE WEBSITE AD

தமிழகத்தில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் ஆதரவைத் தொடர்ந்து தற்போதைய பலம் 112 ஆக உயர்ந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை. இதனால், மீதமுள்ள ஆதரவைப் பெற விஜய் பல்வேறு கட்சிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்சிகளும் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தி தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *