‘தி டார்க் ஹெவன்’ இன்று உலகம் முழுவதும் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை: சித்து, ரித்விகா மற்றும் தர்ஷிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரில்லர் மற்றும் கிரைம் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். சின்னத்திரையில் பிரபலமான சித்து கதாநாயகனாக நடித்துள்ளார். பிக்பாஸ் மூலம் பிரபலமான ரித்விகா மற்றும் தர்ஷிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *