‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம் யாருக்குப் பயன்?’ – போஸ் வெங்கட் கேள்வி
- Surendran Sumdraraj
- 28 Sep, 2026
சென்னை: தமிழக அரசு தொடங்கியுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் விமர்சித்துள்ளார். மக்கள் வாழ்வில் நீண்டகால பயன் அளிக்கும் திட்டங்களுக்கே அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தை இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 25 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.
மேலும், 2026 ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த தகுதியான குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போஸ் வெங்கட் தனது சமூக வலைதளப் பதிவில், அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் ஒரு தலைமுறைக்கே அவசியமான மற்றும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



