பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே: ப.சிதம்பரம்
- Surendran Sumdraraj
- 08 May, 2026
தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக நீடித்து வரும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் கவர்னர் மாளிகை அல்ல, சட்டமன்றம் தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் P. Chidambaram தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைக்க அனுமதி கோரி விஜய் கவர்னர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்திருந்தார். ஆனால், 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை வழங்கினால்தான் ஆட்சியமைக்க அனுமதிக்க முடியும் என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், “சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் மிகப்பெரிய கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பது தான் அரசியல் மரபு” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



