எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்: தம்பிதுரை நம்பிக்கை
- Surendran Sumdraraj
- 08 May, 2026
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மக்கள் மனநிலை உருவாகியுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான எம். தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “தமிழக மக்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கவனித்து வருகின்றனர். மாநிலத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது” என்றார்.
மேலும், “எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். அதற்கான அரசியல் சூழ்நிலை உருவாகி வருகிறது. கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாகச் செயல்பட்டு வருகின்றனர்,” என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



