‘மீசைய முறுக்கு 2’ படத்திலிருந்து ‘பப்பாளி பழமே’ பாடல் வெளியானது

top-news
FREE WEBSITE AD

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்தும், இயக்கியும் உருவாகி வரும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் புதிய அப்டேட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘பப்பாளி பழமே’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘மீசைய முறுக்கு’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படம், இளைஞர்களின் வாழ்க்கை, கனவு மற்றும் இசை உலக போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘ஆரா 10/10’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ‘பப்பாளி பழமே’ பாடலும் அதேபோல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலில் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் நடிகை சைத்ரா அச்சார் இணைந்து தோன்றுகின்றனர். இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பாடல், படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சுந்தர் சி – குஷ்பு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *