சித்தார்த்தர் புத்தராக மாறிய கதை: புத்த பூர்ணிமா உருவான வரலாறு
- Surendran Sumdraraj
- 29 May, 2026
(வைசாகம் அல்லது புத்த பூர்ணிமா) என்பது புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் முக்தி அடைந்ததைக் குறிக்கும் மிக முக்கியமான பௌத்தப் பண்டிகையாகும். இது மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று கொண்டாடப்படுகிறது. சித்ரா பௌர்ணமி தினமானது புத்த பூர்ணிமா தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. அதாவது இந்த தினத்தை புத்தரின் பிறந்தநாள் அல்லது புத்தர் தினம் என்றும் அழைக்கிறார்கள்.
புத்த பூர்ணிமா தினமானது இளவரசர் சித்தார்த்த கௌதமரின் பிறப்பைக் குறிக்கிறது. பிற்காலத்தில் அவர் புத்தராக அறியப்பட்டு புத்த மதத்தை நிறுவினார்.
‘பூர்ணிமா’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இதற்கு ‘முழு நிலவு’ என்று பொருள். இந்த புத்தர் தினம், இந்து மற்றும் பௌத்த சந்திர நாட்காட்டிகளில் “வைசாகி” மாதத்தில் முழு நிலவு நாளில் கொண்டாடப் படுகிறது. நம்முடைய தமிழ் மாத கணக்கின் படி இந்த மாதம் சித்திரை மாதம், ஆனால் சந்திர நாட்காட்டியின் படி, வைகாசி மாதமாக திகழ்கிறது.புத்தரைப் பின்பற்றுபவர்கள் அவரது பிறந்த நாளை அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை என்றாலும், அவரைக் கௌரவிக்கும் விழாக்கள் பல நூற்றாண்டு களாகவே நடத்தப்பட்டன. இருந்த போதிலும் இந்த புத்த பூர்ணிமா தினமானது உலகளவில் முறைப் படுத்தப்படவில்லை.
பிறகு, 1950 ஆம் ஆண்டு,மே மாதத்தில் இலங்கையில், கொழும்பில் நடைபெற்ற உலக பௌத்தர்களின் முதல் மாநாட்டில், வெசாக் பண்டிகையின் போது புத்த பூர்ணிமா ஒரு கொண்டாட்டமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது. புத்தர் ஒரு பௌர்ணமி நாளில் நிர்வாணம் அடைந்ததால் மே மாதத்தில் முழு நிலவு நாளில் இந்த தினத்தை தேர்ந்தெடுத்தார்கள்.
அதற்கு பிறகு தான் இந்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கௌதமர் புத்தராக மாறிய கதை:
கௌதம புத்தர் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் நேபாளத்திலுள்ள லும்பினியில் ராணி மாயா தேவி, மன்னன் சுத்தோதனனுக்கு சித்தார்த்த கௌதமராகப் பிறந்தார். அவர் மிகவும் ஆடம்பரமாக வளர்க்கப்பட்டார்.
புத்தர் ஒரு பெரிய மன்னராக மாறுவார் என்று அவரது பிறப்பில் கணிக்கப்பட்ட காரணத்தினால்,ஆன்மீக வாழ்க்கையின் மீது அவருக்கு ஈடுபாடு வரக்கூடாது என்று கருதி அவருடைய பெற்றோர்கள் அவரை வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தி வைத்தார்கள். இருந்தாலும் கௌதமர் தன்னுடைய 29 ஆம் வயதில், வெளி உலகத்தைப் பார்க்க முடிவு செய்தார். மற்றும் அரண்மனை மைதானத்திலிருந்து தனது தேரில் உல்லாசப் பயணத்தைத் தொடங்கினார். அவரது பயணங்களில், அவர் ஒரு முதியவர், ஒரு நோயாளி மற்றும் ஒரு சடலத்தைக் கண்டார். பயணத்தின் முடிவில், அவர் ஒரு துறவியைப் பார்த்தார். அந்த மனிதனின் அமைதியான நடத்தையால் ஈர்க்கப்பட்டார். எனவே, தன்னைச் சுற்றிலும் இத்தகைய துன்பங்கள் இருந்த போதிலும் அந்த மனிதன் மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்பதைக் கண்டறிய உலகை சுற்றி பார்க்க முடிவு செய்தார்.அவர் அரண்மனையை விட்டு வெளியேறி, அலைந்து திரிந்து பின்னர் சந்நியாசியானார். அவர் அலரா கலாமா மற்றும் உத்ரக ராமபுத்ராவின் கீழ் மருத்துவ முறைகளை பயின்றார். மேலும் அவற்றின் அமைப்புகளில் தேர்ச்சி பெற்றார். பின்னர், அவர் மாய உணர்தலின் உயர் நிலைகளை அடைந்தார். ஆனாலும் அவருடைய மனம் திருப்தி அடையவில்லை. ஆகவே, அவர் ஞானத்தின் மிக உயர்ந்த மட்டமான நிர்வாணத்தைத் தேடிச் சென்றார். அவர் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற முயன்றார். ஒருமுறை, அவர் ஞானம் அடைந்து, அதைப் பற்றி பிரசங்கிக்கச் சென்று பௌத்தத்தை நிறுவினார். இப்படி தான் புத்தராக மாறினார்.இந்த புத்தரை கடவுளாக கருதவில்லை என்றாலும் இவரை மகா விஷ்ணுவின் எட்டாவது அல்லது ஒன்பதாவது அவதாரமகா மக்கள் போற்றினர்.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



