“பாரதிராஜா போல யாரும் இல்லை” – அஞ்சலி செலுத்திய பின் நடிகை சுஹாசினி உருக்கம்

top-news
FREE WEBSITE AD

தேனி, ஜூன் 11 –

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை சுஹாசினி, “பாரதிராஜா போல யாரும் இல்லை” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் சினிமாவுக்கு பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்று புகழாரம் சூட்டினார்.

“அவர் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, பல தலைமுறை நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களை உருவாக்கிய மகத்தான படைப்பாளர். கிராமத்து வாழ்க்கையை உலக சினிமா தரத்தில் திரையில் பதிவு செய்தவர். அவரைப் போன்ற இன்னொருவர் இல்லை,” என்று சுஹாசினி நெகிழ்ச்சியுடன் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *