இருமொழிக் கொள்கையில் சமரசமில்லை- அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

top-news
FREE WEBSITE AD

சென்னை, மே 21-

தமிழக அரசின் இருமொழிக் கொள்கையில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும், மத்திய அரசின் மறைமுக அழுத்தங்களுக்கு தமிழக அரசு அடிபணியாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் Rajmohan திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் கையேடுகளை வெளியிட்டு வைத்த அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசிடமிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி வரவில்லை. அந்த நிதி மாணவர்களுக்கானது. எந்த காரணத்திற்காகவும் அதை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எந்தவித மறைமுக அழுத்தத்திற்கும் தமிழக அரசு அடிபணியாது” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “இருமொழிக் கொள்கை என்பது தவெக அரசின் அடிப்படைக் கொள்கை. மண்ணுரிமை, பெண்ணுரிமை போலவே இது எங்களின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கையாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை. கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *