இரும்பு கம்பியால் தாக்கியதாகப் பிரபலங்கள் மீது பிக்பாஸ் திவாகர் போலீசில் புகார்
- Surendran Sumdraraj
- 12 Apr, 2026
சென்னை, ஏப். 12-
பிக்பாஸ் பிரபலமான திவாகர், தன்னை சில பிரபலங்கள் தாக்கியதாகப் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
திவாகர் அளித்த புகாரின்படி, பாடகர் கானா வினோத், நடிகர் புகழ் மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “ஏப்ரல் 10ஆம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, கானா வினோத் என்னையும் என் குடும்பத்தினரையும் குறித்து தகாத வார்த்தைகளில் பேசினார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது கானா வினோத் மற்றும் புகழ் சேர்ந்து என்னை அடித்தனர்,” என கூறியுள்ளார்.
மேலும், “மாகாபா ஆனந்த் குடிபோதையில் என்னை இரும்பு கம்பியால் தாக்கினார். அந்த தாக்குதலில் எனது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது,” என்றும் திவாகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஈவிபி பிலிம் சிட்டி அருகிலுள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அவர் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



