கோலாலம்பூர் மாநகர மன்ற வாரியக் குழு உறுப்பினராக தியாகராஜ் சங்கர நாராயணன் நியமனம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 29-

கோலாலம்பூர்  மாநகர மன்ற (DBKL) வாரியக் குழு உறுப்பினராகக் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் நியமனம் பெற்றார். இன்று  நண்பகல் 2 மணியளவில் தலைநகரில் அமைந்துள்ள கோலாலம்பூர் மாநகர மன்ற அலுவலகத்தில் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தலைமையில் மாநகர மன்ற டத்தோ பண்டாரிடமிருந்து தியாகராஜன் தமது நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.

17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்துறையில் புலனாய்வு பிரிவு அதிகாரியாக அனுபவம் பெற்றுள்ள தமக்கு இப்பதிவு மக்கள் சேவையாற்றுவதற்கான மகுடமாகப் பார்ப்பதாக தியாகராஜன் தெரிவித்தார். மேலும் தமக்கு இப்பொறுப்பை வழங்கிய மாமன்னர், பிரதமர் உட்பட அனைவருக்கும் தமது நன்றியை அவர் கூறினார்.

மாநகர மன்ற வாரியப் பொறுப்பை நான் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகப் பார்க்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்களில் எனது பொறுப்பிற்கான தேடல்களை மேற்கொண்ட பின் கோலாலம்பூர் வாழ் மக்களை களத்தில் சந்தித்து பிரச்சினைகளைக் களைவதற்கான விடயங்களை நிச்சயமாக மேற்கொள்வேன். மேலும் கோலாலம்பூர் மக்களுக்கும் மாநகர மன்றத்திற்குமான உறவு பாலமாக தாம் கண்டிப்பாக செயல்படுவதாக நியமனத்திற்குச் செய்தியாளர்களைச் சந்தித்த தியாகராஜன் சங்கர நாராயணன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Datuk Periasamy Munisamy

Appreciate DBKL and FT Ministry for the appointment of a Indian rep. Congratulation to Mr. Thiagarajan. Datuk SM Periasamy Managing Editor Tamil Malar Daily