திருவரங்கம் தொகுதி தவெக அலுவலகம் எரிப்பு – அரசியல் தூண்டுதல் என ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்

top-news
FREE WEBSITE AD

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் அலுவலகத்தை குறிவைத்து தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது சிலரின் அரசியல் தூண்டுதலால் செய்யப்பட்ட திட்டமிட்ட வன்முறைச் செயலாகும் என குற்றம்சாட்டியுள்ளார்.

அலுவலகம் மட்டுமல்லாமல், அதன் சுற்றுப்பகுதியில் இருந்த கட்சி பேனர்கள் மற்றும் விளம்பரப் பொருட்களும் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் இத்தகைய சம்பவம் நடைபெற்றிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும், “தேர்தல் தோல்வி பயம் காரணமாக சிலர் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மக்கள் ஆதரவை தாங்கிக்கொள்ள முடியாத எதிர்ப்பார்ட்டிகள் இதுபோன்ற வன்முறைக்கு தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *