கட்டாயத் தொழிலாளர் நடைமுறை இல்லை: அமெரிக்க அறிக்கைக்கு MITI விளக்கம்
- Surendran Sumdraraj
- 04 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 4 –
மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகள் இருப்பதாக உருவாகியுள்ள தவறான எண்ணங்களை மறுக்கும் வகையில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகம் (USTR) கடந்த ஜூன் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தற்காலிகமாக அமலில் உள்ள பிரிவு 122 வரி சலுகை ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த பின்னர், மலேசியப் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்க பரிந்துரை செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடையே கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் MITI வெளியிட்ட அறிக்கையில், USTR-இன் விசாரணை மற்றும் பரிந்துரைகள் மலேசியா கட்டாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது அல்லது நாட்டில் மோசமான பணிச்சூழல் நிலவுகிறது என்பதைக் குறிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச தொழிலாளர் தரநிலைகளைப் பின்பற்றுவதற்கும் மலேசிய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலாளர் சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடங்களில் கண்காணிப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



