நாட்டில் கடுமையான வெப்ப அலை இல்லை – சில பகுதிகளில் மட்டுமே எச்சரிக்கை நிலை

top-news

கோலாலம்பூர், மார்ச் 30-

இன்று காலை 6 மணி நிலவரப்படி, நாட்டில் எங்கும் வெப்ப அலை நிலை 2 (கடுமையான நிலை) பதிவு செய்யப்படவில்லை என மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia) தெரிவித்துள்ளது.

அந்த துறையின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, பெர்லிஸ் மாநிலம் முழுவதும் மற்றும் கெடா மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் வெப்ப நிலை 1 அல்லது எச்சரிக்கை நிலை மட்டுமே பதிவாகியுள்ளது.

கெடாவில் இந்த நிலை பதிவு செய்யப்பட்ட மாவட்டங்கள் சிக், பாடாங் தெராப், பெண்டாங், போக்கோக் சேனா, கூபாங் பாசு, லங்காவி தீவு, கோத்தா ஸ்டார், கோலா மூடா மற்றும் பாலிங் ஆகியவை ஆகும்.

இந்நிலையில், நேற்று கெடா மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக கோத்தா ஸ்டார், கூபாங் பாசு மற்றும் கோலா மூடா பகுதிகளில் பெய்த மழை, அப்பகுதி மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

அதிக வெப்பம் குறைந்து மழை பெய்ததால், அங்கு நிலவி வந்த உஷ்ணமான சூழ்நிலை ஓரளவு சீரடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்