“மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்” – பிலால் எர்டோகான் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

புத்ரா ஜெயா, ஏப். 27-

உலகம் தற்போது திசைதெரியாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது; நாளையே மூன்றாம் உலகப்போர் வெடித்தாலும் மக்கள் அதிர்ச்சியடைய மாட்டார்கள் என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகானின் மகன் பிலால் எர்டோகான் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இங்கு நடைபெற்ற ஒரு சர்வதேச கருத்தரங்கில் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கிய சம்பவம் காரணமாக, விதிமுறைகள் அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய அமைப்பு முறையே சிதைவடைந்து வருவதாகக் கூறினார். உலக அரசியல் அமைப்பின் அடித்தளமே தற்போது ஆபத்துக்குள்ளாகி வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

இதற்கு உதாரணமாக, ஈரானின் எதிர்வினைக்கு நெதர்லாந்து அரசு அளித்த பதிலை அவர் சுட்டிக்காட்டினார். பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலுக்குப் பதிலளித்த ஈரானின் நடவடிக்கை “தூண்டப்படாதது” என கூறப்பட்டதை அவர் விமர்சித்தார்.

மேலும், சில நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை கேள்வி எழுப்பத் தவறியதோடு மட்டுமல்லாமல், அந்த தாக்குதல்களுக்கு ஆதரவளித்திருப்பது தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த சூழ்நிலை உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது என்றும் அவர் கூறினார்.

உலக நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படலாம் எனவும் பிலால் எர்டோகான் எச்சரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *