பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை – வெளியுறவு அமைச்சு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 8 –

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ கடலோரப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த மலேசிய குடிமகனும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் இன்னும் ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால், மணிலாவில் உள்ள மலேசிய தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொண்டுள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடற்கரை பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள் உடனடியாக உயரமான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் வழங்கும் அனைத்து பாதுகாப்பு மற்றும் வெளியேற்ற உத்தரவுகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அவசர காலங்களில் விரைவாக உதவி வழங்கும் நோக்கில், பிலிப்பைன்ஸில் உள்ள மலேசியர்கள் தங்களது தகவல்களை வெளியுறவு அமைச்சின் e-Konsular இணையதளத்தில் பதிவு செய்து, தொடர்பு விபரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *