வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு புதிய திட்ட அறிவிக்கத் தடை – பிரதமர் அன்வார்
- Surendran Sumdraraj
- 30 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 30 –
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதிய திட்டங்கள் அல்லது புதிய கொள்கைகளை அறிவிக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
1954-ஆம் ஆண்டின் தேர்தல் குற்றங்கள் சட்டத்திற்கு (Election Offences Act 1954) இணங்க இந்த விதிமுறை அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளூராட்சி அமைப்புகளின் (PBT) அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
“தேர்தல் பிரச்சார காலத்தில் மாநகராட்சி, மாநில அரசு அல்லது மத்திய அரசின் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதிய திட்டங்களை அறிவிக்க அனுமதி இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், அவை நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடரலாம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



