விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி! ஒருவர் படுகாயம்!

top-news

நவம்பர் 25,

இன்று அதிகாலை Kampung Sungai Lerek சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Hilux ரக வாகனம் எதிரே வந்த Axia ரக வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக Setiu மாவட்டக் காவல் ஆணையர் Zain Mat Dris தெரிவித்தார். 

Axia வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 55 வயது Kamarudin, அவரின் மனைவியான 54 வயது Maimunah mat, இவர்களின் மகளான 30 வயது Nur Ardieana சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 21 வயது மகளான Nur Azwa Shamimi படுகாயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

விபத்திற்குக் காரணமான 24 வயது Hilux வாகனமோட்டியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Tiga beranak maut, seorang parah selepas Perodua Axia bertembung Toyota Hilux di Jalan Kuala Terengganu-Kota Bharu. Pemandu Hilux ditahan dan kes disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *