நெகிரி செம்பிலானில் வங்காளதேசத் தொழிலாளர்கள் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

top-news
FREE WEBSITE AD

போர்ட்டிக்சன், ஆக. 4-

நெகிரி செம்பிலான் மாநிலம் போர்ட்டிக்சனில் உள்ள தாமான் லிங்கி பகுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அகமட் கூறினார்.

நேற்று மாலை சுமார் 4.15 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், தாமான் லிங்கியில் உள்ள ஒரு வீட்டில் பல வங்காளதேசத்தவர்கள் மோதிக்கொண்டதாகப் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும், பலத்த காயமடைந்த மற்றொருவர் உடனடியாக ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் சக நாட்டவரான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இந்த மோதலில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *