அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு கட்டாயம் – அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD


சென்னை

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடு இனிமேல் கட்டாயமாக பின்பற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மருத்துவமனைகளில் அதிகமான கூட்டம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகளின் சிகிச்சைச் சூழலை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

மேலும், நோயாளிகளுக்குத் தரமான உணவு வழங்கப்படும் என்றும், வெளியிலிருந்து உணவு கொண்டு வரும்போது பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். வீட்டிலிருந்து உணவு கொண்டு வருபவர்கள் பாத்திரங்களில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை விட உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பு என்றும், அதனை நிறைவேற்ற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் அருண்ராஜ் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *