படிவம் 6, மெட்ரிகுலேஷன் இனி கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் -பிரதமர்

top-news

புத்ராஜெயா, ஜன. 20-

அடுத்த ஆண்டிலிருந்து, முன்-ஆறாம் படிவம் (Tingkatan Enam),  மேட்ரிகுலேஷன் கல்வி அமைப்பின் முழுப் பொறுப்பையும் உயர் கல்வி அமைச்சு(KPT) ஏற்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

2026–2035 தேசிய கல்வித் திட்டம் அறிமுக விழாவில் உரையாற்றிய அவர், இந்த கல்வி முறையில் சேரும் மாணவர்கள் இனி உயர்கல்வி பிரிவில் அடங்குவர் என விளக்கினார். இதன் மூலம், மாணவர்கள் பல்கலைக்கழக கல்விக்கு மென்மையான மாற்றத்தை அடைய முடியும் என்றும், கல்வித் தரம் மேலும் மேம்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாற்றம், கல்வி அமைப்பை ஒழுங்குபடுத்துவதோடு, மாணவர்களின் கல்விப் பாதையைத் தெளிவாக வடிவமைக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அறைகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

“30 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர் அறைகள் தற்போது வசதியற்றதும் பாதுகாப்பற்றதுமாக உள்ளன. ஆசிரியர்கள் நிம்மதியாக ஓய்வெடுத்து பணியாற்றக்கூடிய சூழல் அவசியம்,” என அவர் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *