திருவண்ணாமலை தொகுதி: எ.வ.வேலு வெற்றி செல்லும் – தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு

top-news
FREE WEBSITE AD

சென்னை: திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றி செல்லும் என சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட எ.வ.வேலு, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, அருள் ஆறுமுகம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கான போதுமான காரணம் இல்லை எனக் கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகும் நிலை தொடர்கிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *