PN-லிருந்து பெர்சாத்து விலகுவதே சிறந்தது! - பாஸ் கருத்து
- Shan Siva
- 27 Oct, 2026
கோலாலம்பூர், அக் 27: பெரிக்காத்தான் நேஷனல்
கூட்டணியில் இருந்து பெர்சாத்து கட்சி விலகுவதே சிறந்தது என, அக்கூட்டணியின் துணைத் தலைவரும் பாஸ்
கட்சியின் துணைத் தலைவருமான துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான்
நேஷனல் கூட்டணியை கலைப்பது அல்லது கூட்டணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்குப் பதிலாக, பெர்சாத்து கட்சி கூட்டணியில் இருந்து
விலகலாம் என அவர் கூறினார்.
பெர்சாத்து கட்சியின்
தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பெர்சாத்து எந்த விதிகளையும் மீறாத நிலையில் ஏன்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த துவான்
இப்ராஹிம், முகைதீனின் கேள்விக்கான பதில் அவரது
சொந்த கருத்திலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனல்
தொடர்பான புகாரை பெர்சாத்து கட்சியே சங்கங்களின் பதிவிலாகாவிடம் (ஆர்.ஓ.எஸ்.)
அளித்ததாகவும், தற்போது பெரிக்காத்தான் நேஷனல் பதிவு
நீக்கம் செய்யப்பட்டதை எண்ணி அந்தக் கட்சியே வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பெர்சாத்து கட்சி கூட்டணியின்
அரசியலமைப்பை மீறியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றம்
பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

