டோவினோ தாமஸ் - நஸ்ரியா இணையும் புதிய படம்: டைட்டில் வெளியீடு
- Surendran Sumdraraj
- 11 May, 2026
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான Tovino Thomas மற்றும் Nazriya Nazim இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய திரைப்படத்திற்கு “தந்தா வைப்” (Thantha Vibe) என்று பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தை இயக்குனர் Muhsin Parari இயக்குகிறார். இவர் முன்னதாக “தல்லுமாலா”, “வைரஸ்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். படத்தின் திரைக்கதையை முக்சின் பராரி மற்றும் இயக்குனர் Zakariya இணைந்து எழுதியுள்ளனர்.
டோவினோ தாமஸ் மற்றும் நஸ்ரியா இணையும் முதல் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்புடன் புதிய திறமைகளை தேர்வு செய்யும் “காஸ்டிங் கால்” போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



