பாரிசான் அமைச்சருக்குத் தடை! அலோர் காஜா வேட்புமனு தாக்கலில் சலசலப்பு!

top-news

அக்டோபர் 31,

மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அலோர் காஜா சட்டமன்றத்துக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு ஆதரவளிக்க வந்த பாரிசான் துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான Datuk Seri Mohamad Hasan வேட்புமனு மையத்துக்குள் நுழைய முயற்சித்த போது தேர்தல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பாரிசான் வேட்பாளரான Datuk Abu Hakim Abdul Wahid உடன் பாரிசான் ஆதரவாளர்கள் மையத்துக்குள் நுழைந்த போது அவர்களை அனுமதித்ததும் வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சம்பவ இடத்திலிருந்து கோபமாக வெளியேறினார். 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி வேட்பாளரும் அவருடைய ஆதரவாளர்களும் மட்டுமே வேட்புமனு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தனது ஆதரவாளல்களின் எண்ணிக்கையை முதல் நாளே தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து, முன் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதிப் பெற்ற ஆதரவாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கலின் போது மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். Datuk Seri Mohamad Hasan தடுத்து நிறுத்தப்பட்ட போது பாரிசான் ஆதரவாளர்கள் வேட்புமனு மையத்திற்குள் இருந்ததாகவும் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அலோர் காஜா தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்