தீயில் கருகிய சுங்கச் சாவடியும் லாரியும்!
- THINAGAREN SANGGAREN
- 24 Jun, 2026
ஜூன் 24,
காஜாங்கில் உள்ள Sungai Ramal சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகிலிருந்த லாரியும் தீயும் கருகியது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.55 மணிக்குத் தீ விபத்து குறித்து சுங்கச் சாவடி ஊழியரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
லாரியிலிருந்து பரவிய தீ சுங்கச் சாவடியின் மின்சாரக் கேபிள்கள் மூலமாகச் சுங்கச் சாவடிக்குள் பரவியதாக முதற்கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் 3 டான் லாரி 80% தீயில் கருகியதாகவும் சுங்கச் சாவடி 90% தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



