ரயில் மீது கல்வீச்சு!14 வயது மாணவன் கைது!

top-news

கோலாலம்பூர், அக் 31:பெட்டாலிங் ஜெயா பகுதியில், கேடிஎம்பி ரயில் மீது கல் வீசி ரயிலின் ஜன்னலை உடைத்ததாக 14 வயது பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், ரயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இது தொடர்பாக, இன்று கம்போங் குவார் சான்ஜியில் உள்ள ஒரு வீட்டில் அந்த மாணவரைப் போலீசார் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் ஜன்னல் மீது வெளிப்புறப் பொருள் ஒன்று மோதியதில் கண்ணாடி உடைந்ததைத் தொடர்ந்து, ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பாதிக்கப்பட்ட ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், அந்தப் பெட்டிக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர், சேதமடைந்த ஜன்னல் கண்ணாடியை மாற்றுவதற்காக அந்தப் பெட்டி புக்கிட் தெங்கா பணிமனைக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, இதற்கு முன்னர் எந்தக் குற்றப் பதிவும் இல்லாத அந்த 14 வயது மாணவர், விசாரணைக்கு உதவும் வகையில் கங்கார் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிறருக்குச் சொந்தமான சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் 427-ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்