அமெரிக்க கட்டணங்களின் தாக்கம் விரிவான ஆய்வை எம்ஐடிஐ முன்வைக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்.9-

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் (எம்ஐடிஐ) அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு பல ஏற்றுமதி துறைகளின் மீதான வரிகளின் தாக்கம் குறித்த விரிவான ஆய்வை சமர்ப்பிக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அசிஸ், ஆசியான் பொருளாதார அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்த செயல்களைத் தயாரிப்பதற்காக மெய்நிகர் சந்திப்பையும் நடத்துவார் என்றார்.

கட்டணங்களை அமல்படுத்துவதால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் துறைகளுக்கான ஆதரவின் வடிவத்தை தீர்மானிக்க சில துறைகளில் தாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அன்வார் அமெரிக்க கட்டணங்களைப் பற்றி கூறினார்.

மக்கள், நாட்டின் வணிகத் துறையின் நல்வாழ்வை உறுதிப்படுத்த அனைத்து விருப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார் மலேசியாவின் பொருளாதார. தொழில்துறை பின்னடைவைக்
சுட்டியெழுப்ப புதிய தொழில்துறை மாஸ்டர் பிளான் 2030. தேசிய ஆற்றல் மாற்றம் பாதை வரைபடம், பிற மாஸ்டர் திட்டங்களால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளபடி நமது பொருளாதார, தொழில்துறை சீர்திருத்த நிகழ்ச்சி நிரலையும் மடானி அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஆசியான் தலைவராக மலேசியா மற்ற அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றார். அமெரிக்காவின் அதிக கட்டணங்களுக்கு உட்பட்ட நாடுகளில் ஆசியான் நாடுகள் உள்ளன. ஆசியான் தலைவராக மலேசியா, திறந்த விநியோகச் சங்கிலியைப் பராமரிக்கும் முயற்சிகளை வழிநடத்தும். மேலும் ஆசியானின் கூட்டுக் குரல் அனைத்துலக அரங்கில் தெளிவாகவும் உறுதியாகவும் ஒலிப்பதை உறுதி செய்யும்.

இந்த கட்டணமானது வெளிப் பொருளாதாரத்தின் பெரிய சவால்களின் தொடக்கமாக இருக்கலாம் என்பதை அறிந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள அனைவரும் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். நமது தொடர்ச்சியான செழிப்பைப்
பாதுகாக்க ஒரு நாடாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

கட்டணத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்றார். இதை தனியாக செய்யாமல், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், ஆக்கப்பூர்வமாக செய்வோம். மலேசியா, நமது மக்கள். வணிகங்கள், ஏற்றுமதியாளர்களின் நலன்களுக்கு மடானி அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று அன்வார் கூறினார்.

MITI akan kemuka kajian impak tarif eksport ke AS minggu depan. PM Anwar tekankan kerjasama ASEAN hadapi cabaran ekonomi. Kerajaan akan terus lindungi kepentingan rakyat, eksport, serta percepat reformasi industri demi kelestarian ekonomi negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *