சக பெண் ஊழியரை கழிவறையில் வீடியோ பதிவு செய்த கடை ஊழியர்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, டிச 25: நான்கு நாட்களுக்கு முன்பு கழிவறையைப் பயன்படுத்தியபோது, ​​தனது சக ஊழியரின் கண்ணியத்தை அவமதித்ததாக கடை ஊழியர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

19 வயதான அந்த ஆடவர் மீது  அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

அவ்வாடவர். கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி இரவு 8.23 ​​மணியளவில் உலு லங்காட்டின் ஜாலான் அம்பாங் ஹிலிரில் உள்ள ஓய்வறையில் காசாளராக வேலை செய்து வந்த பெண்ணை கழிவறை பயன்பாட்டில் இருந்தபோது வீடியோ பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509 இன் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *