பிபா உலகக் கோப்பைக்கு முன் பீலேவுக்கு பிரம்மாண்ட சிலை

top-news
FREE WEBSITE AD

2026 பிபா உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, பிரேசில் கால்பந்து ஜாம்பவான் Pelé-வை கௌரவிக்கும் வகையில் மெக்சிகோவின் குவாடலஹாரா நகரில் 31 அடி உயர பிரம்மாண்ட சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை, குவாடலஹாராவில் உள்ள Jalisco Stadium மைதானத்தின் வெளியே அமைந்துள்ள “Plaza Brazil” பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 9.5 மீட்டர் (31 அடி) உயரம் கொண்ட இந்த வெண்கலச் சிலை, 1970 உலகக் கோப்பையில் பிரேசிலுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்த பீலேவின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் ஜலிஸ்கோ மாநில ஆளுநர் Pablo Lemus கலந்து கொண்டு பேசுகையில், “பீலே குவாடலஹாராவை நேசித்தார். 1970 உலகக் கோப்பி போட்டியின்போது பிரேசில் அணிக்கும் இந்த நகர மக்களுக்கும் தனித்துவமான உறவு உருவானது. இந்த சிலை உலகக் கோப்பிக்கான பெரிய பரிசாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

1970 உலகக் கோப்பை தொடரில், 1970 FIFA World Cup போட்டியின் ஆரம்ப சுற்று மற்றும் அரையிறுதி ஆட்டங்களை பிரேசில் அணி ஜலிஸ்கோ மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அத்தொடரில் பீலே தலைமையிலான பிரேசில் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *