நீண்ட விடுமுறை காரணமாக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
- Tamil Malar (Reporter)
- 16 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 16-
சீனப் புத்தாண்டு நீண்ட விடுமுறை மற்றும் ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் தலைநகரிலிருந்து வெளியேறும் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. Lembaga Lebuhraya Malaysia (LLM) தனது சமூக வலைத்தளப் புதுப்பிப்பில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி பல கட்டண நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக தெரிவித்தது. சில பகுதிகளில் மழை பெய்ததும் போக்குவரத்தை மேலும் பாதித்ததாக கூறப்படுகிறது.
PLUS Malaysia Berhad நெடுஞ்சாலையின் வடக்கு திசையில் ஸ்லிம் ரிவர் முதல் சுங்கை வரை கிலோமீட்டர் 358.3 பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவசர பாதை மறிக்கப்பட்டு, வாகனங்கள் மெதுவாகச் சென்று வருகின்றன. தெற்கு திசையில் கோபெங் முதல் தாப்பா, சுங்கை பெசி டோல் முதல் Universiti Putra Malaysia, காஜாங் முதல் பாங்கி மற்றும் செனை முதல் குலாய் வரை நெரிசல் நிலவுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



