சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ – 16 பேர் பலி
- Surendran Sumdraraj
- 14 Sep, 2026
சாண்டியாகோ –
சிலி நாட்டில் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியின் அரோகெனியா மாகாணத்தில் உள்ள பிட்ருப்கியூன் நகரில் இந்த முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. அங்கு மொத்தம் 26 முதியவர்கள் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பரவி, கட்டிடத்தின் பல அறைகளையும் சூழ்ந்தது.
தீயைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர்கள் வெளியேற முயன்றபோதும், சிலரால் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. இந்த கோர விபத்தில் 16 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். எஞ்சிய 10 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



