பாசில் ஜோசப் - டோவினோ தாமஸ் நடித்த ‘அதிரடி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
- Surendran Sumdraraj
- 12 May, 2026
மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “Athiradi” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் Basil Joseph மற்றும் Tovino Thomas இணைந்து நடித்துள்ள இந்த ஆக்சன் - நகைச்சுவை திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தை இயக்குனர் Arun Anirudhan இயக்கியுள்ளார். கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் Vineeth Sreenivasan முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி காட்சிகள், நகைச்சுவை மற்றும் இளைய தலைமுறையை கவரும் காட்சிகளுடன் டிரெய்லர் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிரெய்லரில் டோவினோ தாமஸ் ஆக்ஷன் நிறைந்த தோற்றத்தில் இடம்பெற்றுள்ளதுடன், பாசில் ஜோசப்பின் நகைச்சுவை கலந்த நடிப்பும் கவனம் ஈர்த்துள்ளது. இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



