வேலையின்மை கட்டுக்குள் உள்ளது – பொருளாதார அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 25 –

மலேசியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பதிவாகி வரும் வேலை இழப்பு போக்கு தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், நாட்டின் வேலையின்மை விகிதம் இன்னும் 4 சதவீதத்திற்கும் கீழே இருப்பதாகவும் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அக்மால் நஸ்ருல்லா முகமட் நசீர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தில் பதிலளித்த அவர், மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 2.9 சதவீதமாகவும், ஏப்ரல் மாதத்தில் 3 சதவீதமாகவும் இருந்ததாகக் கூறினார். இது முழுமையான வேலைவாய்ப்பு நிலையைக் குறிக்கும் 4 சதவீத எல்லைக்குக் கீழே இருப்பதால், நிலைமை இன்னும் கட்டுக்குள் இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.

மேலும், உலகப் பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் சில நிறுவனங்களின் செயல்பாடுகள் சுருக்கப்படுவது போன்ற காரணங்களால் அரசாங்கம் இந்த விவகாரத்தை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வேலை இழப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்ட அமைச்சர், ஜூன் 22-ஆம் தேதி வரை மொத்தம் 6,197 பேர் வேலை இழந்துள்ளதாகக் கூறினார். அதேசமயம், மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 7,766 ஆக இருந்ததாகவும், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *