சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம்!
- Shan Siva
- 27 Nov, 2025
கோலாலம்பூர், நவ 27: சுமத்ராவின் வடமேற்கு கடற்கரையில் இன்று மதியம் 12.56 மணிக்கு ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களில் நிலநடுக்கங்களை ஏற்படுத்தியது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சிமியூலுவிலிருந்து தெற்கே 8 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி 57கி.மீ ஆழத்தில் இருந்தது.
தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அது ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



