ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘இணை உறுப்பினராக’ கனடா? சிரிக்கத்தக்கது என டிரம்ப் கடும் எதிர்ப்பு
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
வாஷிங்டன், செப். 17-
கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் ‘இணை உறுப்பினராக’ (Associate Member) இணைக்கும் யோசனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முயற்சியை அவர் “சிரிக்கத்தக்கது” என விமர்சித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிரான நோக்கத்துடன் அது முன்னெடுக்கப்பட்டால் ஐரோப்பிய நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக மாற்றுவதற்கான வாய்ப்பை முன்வைத்துள்ளார். எனினும், இது முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்து அல்ல; புதிய வகையிலான கூட்டாண்மை குறித்த முன்மொழிவாகும். அதன் சட்டபூர்வ அமைப்பும் உரிமைகளும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், கனடா ஒரு மோசமான வர்த்தக பங்குதாரராக இருந்ததாகக் குற்றம்சாட்டினார். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு எதிரான “பகைமைச் செயல்” என தாம் கருதினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அதிக வரி விதிப்பதுடன் சில துறைகளில் வர்த்தகத்தையும் நிறுத்தக்கூடும் என தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



