ஈரான் உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து அக்கறையில்லை – டொனால்ட் டிரம்ப்
- Surendran Sumdraraj
- 04 Mar, 2026
வாஷிங்டன், மார்ச் 4-
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்த உள்ள இந்த கோடை கால உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்றாலும் தமக்கு அதில் அக்கறையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பொலிடிகோ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “எனக்கு அதில் கவலை இல்லை. ஈரான் ஏற்கனவே கடுமையாக தோல்வியடைந்த நாடு,” என்று குறிப்பிட்டார்.
வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் ஈரான் அணி குழு G-ல் பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் போட்டியிட உள்ளது. இந்த குழு போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் மற்றொரு ஆட்டம் சீயாட்டில் நகரிலும் நடைபெறவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.
எனினும், கடந்த ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின் கீழ் அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.
இந்த பயணத் தடைகள் காரணமாக ஈரான் அணியின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



