“நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது... ஈரான் விரைந்து செயல்படுவது நல்லது” – Donald Trump எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 18 May, 2026
Donald Trump, Iran அமெரிக்காவுடன் ஒப்பந்தம் தொடர்பாக விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், “நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானுக்கான நேரம் குறைந்து வருகிறது. அவர்கள் விரைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மீதமிருக்காது” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. குறிப்பாக ஈரானின் அணு திட்டம், யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மத்திய கிழக்கு பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையில், Israel மற்றும் Iran இடையிலான பதற்றமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக அணு நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடைபெற்றதாக வெளியான தகவல்கள் உலக நாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த பதற்றம் உலக எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழித்தடம் மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சம் காரணமாக சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



