“உண்மையும் நீதியும் வெல்லும்” நடிகர் ரவி மோகனுக்கு ஆதரவாக மீரா சோப்ரா கருத்து
- Surendran Sumdraraj
- 21 May, 2026
சென்னை, மே 21-
நடிகர் Ravi Mohan மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை Meera Chopra ரவி மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து உருக்கமாகப் பேசியிருந்தார். மேலும், தன்னை மனரீதியாக கடுமையாகப் பாதித்த சம்பவங்கள் நடந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மீரா சோப்ரா தனது சமூக வலைதள பதிவில், “எல்லா நேரத்திலும் ஆண்களே தவறானவர்கள் அல்ல. பல பெண்கள் சட்டங்களைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். ஆண்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நான் ரவி மோகனை மிகவும் எளிமையான மனிதராகவே அறிந்திருக்கிறேன். உண்மையும் நீதியும் வெல்லும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



