முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் கவனத்திற்கு.... - அம்னோ உலாமா மன்றம்
- Shan Siva
- 31 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 31: இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அம்னோவின் உலமா சபை நினைவூட்டியுள்ளது.
மத உணர்வைத்
தூண்டும் வகையில் சில தரப்பினரால் கையாளப்படக்கூடிய எதிர்மறையான கருத்துக்களைத்
தவிர்க்க, அத்தகைய
அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அம்மன்றம் ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
வீட்டுவசதி மேம்பாடு
மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இரண்டு சர்ச்சைகளிலும்
சிக்கியிருந்தாலும், மன்றம் தனது
அறிக்கையில் அவரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



