பள்ளி விபத்தில் காயமடைந்த மாணவி சுயநினைவுடன் இருக்கிறார்! - கிளந்தான் சுகாதாரத்துறை விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, செப் 13: நேற்று பெண் ஆசிரியர் ஒருவர் செலுத்திய கார் மோதியதில் படுகாயமடைந்த 13 வயது மாணவிக்கு, தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

 பாதிக்கப்பட்ட ஜாரா அக்தர் சம்சூரி, தற்போது ராஜா பெரெம்புவான் ஜைனப் II மருத்துவமனையில் (HRPZ II) சிகிச்சை பெற்று வருகிறார் என்று கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது அஸ்மான் யாக்கோப் தெரிவித்தார்.

அவர் சுயநினைவுடன் இருக்கிறார், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் சிக்கல்கள் இன்றி முழுமையாகக் குணமடையும் வரை, அவருக்குச் சாத்தியமான சிறந்த சிகிச்சையும் நெருங்கிய கண்காணிப்பும் கிடைப்பதை துறை தொடர்ந்து உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் நல்வாழ்விற்காகப் பொதுமக்கள் பிரார்த்தனை செய்வார்கள் என நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

பள்ளி வளாகத்தில் ஒரு பெண் ஆசிரியை செலுத்திய வாகனம் மோதியதில், 13 வயதான முதலாம் படிவ மாணவி நூர் பாத்திமத்துல் ஹவா முகமது அஸாவுதீன் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் படுகாயம் அடைந்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம், தஞ்சோங் மாஸ் தேசிய இடைநிலைப் பள்ளியின் மசூதிக்கு முன்னால், பிற்பகல் சுமார் 1.50 மணியளவில் நிகழ்ந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *