பாஸ் கட்சி பி.என்.-ஐ விட்டு வெளியேற வேண்டும்; பெர்சத்து தகவல் பிரிவு தலைவர் பரிந்துரை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 19 –

பாஸ் கட்சி பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் இருந்து விலகி புதிய அரசியல் கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும், பெர்சத்து கட்சி மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து பி.என்.-இல் தொடர வேண்டும் என்றும் பெர்சத்து தகவல் தலைவர் டத்தோ துன் பைசால் இஸ்மாயில் அசீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ் கட்சி பி.என். கூட்டணியில் இருந்த காலம் முழுவதும் கூட்டணியின் கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்கு முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, ‘பாங்காக் நடவடிக்கை’ (Langkah Bangkok) என அழைக்கப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் கூட்டணியின் மற்ற தலைவர்களுக்குத் தெரியாமல் நடத்தப்பட்டதாகவும், அது பி.என். கூட்டணிக்குள் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

மேலும், பாஸ் கட்சி உம்னோவுடன் இணைந்து ‘முவாபகாட் நேஷனல்’ (MN) கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாக பலமுறை வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஆகியோருடன் பாஸ் தலைவர்கள், பெர்சத்து அல்லது பி.என். தலைமையின் அறிவில்லாமல் சந்திப்பு நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *