RM548 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை முடக்க தவறியது SPRM!
- THINAGAREN SANGGAREN
- 22 May, 2026
மே 22,
முன்னாள் நிதி அமைச்சர் TUN DAIM-மின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் போதுமான ஆதாரங்களை வழங்காததால் உயர்நீதிமன்றம் துன் டைம்மின் சொத்துகள் மேலானக் கெடுபிடிகளை ரத்து செய்து, லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பறிமுதல் கோரிக்கையை நிராகரித்தது. துன் டைம், அவரின் மனைவி நைமா அப்தூல், அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 7 தனிநபரின் சொத்துகளையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க மட்டுமே உரிமை இருப்பதாகவும் சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும் உரிமம் இல்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி Datuk Mohd Arief Emran Arifin உத்தரவிட்டார்.
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம்முடன் தொடர்புடையதாக நம்பப்படும் சுமார் RM548 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானச் சொத்துகளை ஊழல், நிதி மோசடி, பயங்கரவாத நிதி சேமிப்பு ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் முடக்கம் செய்ய கடந்த 2024 ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் நீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், நிதி மோசடிக்கான எந்தவோர் ஆதாரங்களையும் தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் நிதிமன்றத்திற்கு வழங்காததால் துன் டைம்மின் சொத்துகள் முறையாக அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



