RM 1 Billion மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ளது!

top-news

நவம்பர் 27,


மின்சாரம் அடிப்படை தேவையாக இருந்தாலும் TNB கட்டணத்தைச் செலுத்தாமல் நிலுவையில் உள்ள மொத்த தொகை 1.8 பிலியன் ரிங்கிட் என எரிசக்தி மின் உற்பத்தி அமைச்சின் துணை அமைச்சர் Akmal Nasrullah Mohd. Nasir தெரிவித்தார். 

கடந்த செப்டம்பர் மாதம் வரையிலானக் கணக்கின்படி 627,491 மின்சாரப் பயனர்களின் கட்டணம் நிலுவையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன் மொத்தத் தொகை RM1,008,771,447.78 என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவிதார்.
 
மாநில அரசுகள் மின்சாரத்திற்கான மானியங்களை வழங்கினாலும் பயனர்கள் நிலுவையில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு 464,076 TNB பயனர் RM945,435,794.07 மின்சாரக் கட்டணம் நிலுவையில் வைத்திருந்த நிலையில் தற்போது நிலுவைத் தொகை அதிகரித்திருப்பதாக எரிசக்தி மின் உற்பத்தி அமைச்சின் துணை அமைச்சர் Akmal Nasrullah Mohd. Nasir தெரிவித்தார்.
 
கடந்த 2023 ஆம் ஆண்டு Selangor, Terengganu, Perak, Pahang, Negeri Sembilan மாநிலங்களில் அதிகமானப் பயனர்கள் மின்கட்டணத் தொகை நிலுவையில் இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் ஆண்டு வரையிலானக் கணக்கெடுப்பில் Selangor, Kuala Lumpur, Perak, Johor, Terengganu ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயனர்கள் அதிகமாக மின் கட்டணத்தை நிலுவையில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் மொத்தம் 10.4 மில்லியன் பதிவு செய்யப்பட்ட TNB பயனர்களாக இருப்பதாகவும் 8.5 மில்லியன் உள்நாட்டுப் பயனர்கள் என்றும் 1.9 மில்லியன் பயனர்கள் வெளிநாட்டுப் பயனர்கள் என்றும் துணை அமைச்சர் Akmal Nasrullah Mohd. Nasir விளக்கமளித்தார்.

Sebanyak 627,491 akaun TNB dipotong sehingga September 2023, melibatkan tunggakan RM1.01 bilion. TNB mempunyai 10.4 juta pengguna berdaftar, terdiri daripada 8.5 juta pengguna domestik dan 1.9 juta bukan domestik. Tunggakan tertinggi dicatat di Selangor, Kuala Lumpur, Perak, Johor, dan Terengganu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *